Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில்… இந்த தொடரில் பங்கேற்கும் நடராஜன்… பிசிசிஐ அறிவிப்பு…!!

இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரரான நடராஜன் விஜய் ஹசாரே தொடரில் பங்கேற்பார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.  

இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரரான நடராஜன் ஆஸ்திரேலிய தொடரில் தன் அபார திறமையை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். அதன் பின்பு இங்கிலாந்திற்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் இவர் இந்திய அணிக்கு மீண்டும் எப்போது திரும்புவார் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் விஜய் ஹசாரே உள்ளூர் தொடரில் நடராஜன் பங்கேற்பார் என்ற செய்தி உறுதியாகியுள்ளது.

இதனைதொடர்ந்து பிசிசிஐ, விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான தேதிகளை அறிவித்திருக்கிறது. இதன்படி இந்த தொடரானது பிப்ரவரி 20ஆம் தேதியன்று தொடங்கி மார்ச் 17ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து அனைத்து அணிகளையும் ஆறு அணிகளாக பிரிக்கப்பட்டு நடைபெறும் இந்த தொடரில் தமிழ்நாட்டு அணியில் நடராஜன் இடம் பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |