இந்தியாவை தாக்குவதற்காக சீனா தயாராகிக்கொண்டிருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் என்ன நடக்கக் கூடாது என்று அஞ்சிக் கொண்டிருந்தமோ அது நடந்து விட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டை ஒட்டியுள்ள நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளில் இருந்தும் காற்றாலை, சூரிய ஒளி கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை சீனாவின் சினோசர் இடெக்வின் இலங்கை வழங்கியுள்ளது. இத்திட்டமானது 87.60 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதனை மேலோட்டமாக பார்க்கும் போது இது ஒரு புதுப்பிக்கவல்ல எரிசக்தி திட்டத்தை போல தெரியும். ஆனால் தீவுகளை சீனா தலமாக மாற்றிக் கொண்டால் தமிழ்நாட்டு மீது சீனா எந்த நிமிடமும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. ஏனென்றால், இலங்கையின் கலப்பு மின் திட்டத்தின் மதிப்பு வெறும் 87 கோடியே ஆகும். இதற்கு இந்திய நிறுவனங்களும் போட்டியிட்டது.ஆனால் இதனை சீனா நிறுவனம் தெரிவித்திருந்த ஒப்பந்தப்புள்ளியில் கவர்ச்சியில் இந்த ஒப்பந்தத்தை சீனா பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தம் சீனாவுக்கும், இந்தியாவிற்கும் கடுகளவு சமமானது. அதனால் இத்திட்டத்தினை சீனா சாதுரியமாக கைப்பற்றியது வேறு காரணம் இருக்கக்கூடும். சீனாவுக்கு மின்சாரத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள தீவுகளில் செலவாகும் பணத்தை விட அமெரிக்காவில் குறைந்த அளவு பணத்திலேயே மின்சாரத்தை பெற்றுவிடலாம். இருப்பினும் சீனா இதை கைப்பற்றியதற்கு, அத் தீவுகளை இந்தியாவிற்கு எதிரான ராணுவத் தளமாக மாற்றிக் கொள்ளலாம் என்று திட்டமிட வாய்ப்புள்ளது.
ஏனென்றால், தீவுகளில் மின் திட்டங்களை செயல்படுத்தும் சாக்கில் இந்தியாவை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும். அதனால், ஆயுதங்களையும் ராணுவத் தளவாடங்களையும் தீவில் கொண்டுவந்து வைத்து விட்டால் இரு நாடுகளுக்குள் போர் ஏற்படும் போது இந்தியாவை தாக்கி நிலைகுலைய வைக்க முடியும். இவை சாதாரண ஆபத்து அல்ல. இதனை உடனடியாக உணர்ந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்தியா எந்த நேரமும் ஆபத்தின் விளிம்பில் தான் இருக்கும். அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
இதன் மூலமாக சீனா இந்தியாவிற்கு தொல்லை கொடுக்கலாம். அதனால் சீனாவை சமாளிப்பதிலேயே இந்தியா முழு கவனத்தையும் செலுத்தினால் இந்தியாவின் வளர்ச்சியில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். இதனை தடுப்பதற்கு இலங்கையில் தமிழர்கள் வலிமையுடன் இருப்பதுதான் இந்தியாவின் பாதுகாப்பிற்கு நல்லது.
இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெறுவது, இலங்கையில் உள்ள தமிழர்களை வலுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் சீனாவின் அச்சுறுத்தலை தடுக்க முடியும். எனவே, இதற்காக இலங்கை சார்ந்த வெளியுறவுக் கொள்கையை இந்தியா மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். ஈழத்தமிழர்களை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.