இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததால் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. அதன் மூலம் இந்திய அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் 68.3% புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து 4- வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி 70.2% புள்ளியுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து அணி 70.0% புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலியா அணி 69.0% புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன. இதன் மூலம் இரண்டு போட்டிகளையும் வென்றால் மட்டுமே இந்தியா இறுதிப் போட்டிக்குள் செல்லும் என்ற நெருக்கடியில் உள்ளது.