Categories
தேசிய செய்திகள்

“உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்” ஆட்டிற்கு பிரசவம் பார்த்து…. நிரூபித்த குட்டி சிறுமி…. வைரலாகும் வீடியோ…!!

குழந்தை ஒன்று ஆட்டிற்கு பிரசவம் பார்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உயிர்கள் இடத்தில் அன்பு வேண்டும் என்ற பாரதியாரின் வரிகள் சிறுவயதிலேயே நமக்கு கற்பிக்கப்பட்டன. அந்த வரிகளை உண்மையாக்கும் வகையில் தற்போது சிறுமி ஒருவர் ஆட்டுக்குட்டிக்கு பிரசவம் பார்த்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற திருவள்ளுவர் கூறியது போல ஆட்டின் துன்பத்தை அறிந்து அதற்கு உதவி செய்துள்ளார் அந்த சிறுமி. இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. ஆடுகளுக்கு வீட்டில் உள்ள பெரியவர்கள் பிரசவம் பார்ப்பது வழக்கம். இந்நிலையில் இந்த ஆடு ஏற்கனவே இரண்டு குட்டிகள் ஈன்று மூன்றாவது குட்டிகள் வெளிவராமல் இருந்துள்ளது.

இதை கண்ட சிறுமி குட்டி வெளியில் வராததை கண்டு அதன் காலை வெளியே இழுத்து பார்த்துள்ளார். மேலும் குட்டியை வெளியே எடுத்து தன் வாயில் உள்ள கசடுகளை எடுத்து விடுவது போல் அந்த சிறுமியின் வாயில் உள்ள கசடுகள் எடுத்துவிட்டு அதன் அம்மாவிடம் ஒப்படைத்துள்ளார். தற்போது இந்த வீடியோ எடுத்தவர்” நான் இவ்வளவு இளமையான விலங்குகள் மருத்துவரை கண்டதில்லை என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து இந்த சிறுமிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/i/status/1358377581041643520

Categories

Tech |