சென்னை அரக்கோணம் சாலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்த போது துப்பாக்கியுடன் ஒரு நபர் வந்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தங்கள் ஆட்சியை தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை அரக்கோணம் சாலையில் இன்று தேர்தல் பிரசாரம் செய்தார். அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் துப்பாக்கி, குண்டுகளுடன் சுற்றித் திரிந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்டவர் இடம் ஆயுதங்கள் மற்றும் பல நம்பர் பிளேட்டுகள் இருந்ததாக காவல்துறையினர் தகவல் கொடுத்துள்ளனர்.