வந்தவாசி அருகே சொத்து தகராறு காரணமாக தாயை பழிவாங்குவதற்கு மகனே பாலில் விஷம் கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெசராபுரத்தை சேர்ந்தவர் செல்வநாயகம் மற்றும் மேரி இவர்களுக்கு 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். மேரியின் பெயரில் வீட்டு மனை ஒன்று இருந்தது மேரி தனது இரண்டாவது மருமகளின் பெயரில் தனது சொத்தை எழுதி வைத்தார். இதை அறிந்த மூத்த மகன் மேரி இடம் பெரும் சண்டையிட்டு வாக்குவாதம் செய்தான் .
இதனை மனதில் கொண்டு மூத்த மகன் மேரியை கொள்ள திட்டமிட்டான். அதேபோல் மேரி பசும் பால் கரந்து கொள்முதல் கம்பெனிக்கு கொடுக்கச் சென்றபோது அதில் ஒருவித வாசனை வெளியானது இதனை அறிந்த பால் கம்பெனி ஜான் பால் மேரி இடம் விசாரித்தார் மேரி எதுவும் தெரியாது என்பதால் விசாரணை போலீசிடம் சென்றது.
மேரியும் எதுவும் தெரியாது என்று கூறியதால் வினோத்தை அழைத்து விசாரித்தபோது வினோத் தன் தாயை கொல்ல திட்டமிட்டது தெரியவந்தது. பிறகு போலீஸ் வினோத்தை சட்டப்படி கைது செய்து சிறையில் அடைத்தது.