ஜெர்மனியில் 3518 பேரை கொலை செய்ய உதவியாக இருந்த 100 வயது மதிக்கத்தக்க முதியவர் மீதான குற்றசாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனில் இரண்டாம் உலகப்போரின்போது நாசிக்கிள் அமைந்துள்ள சச்சென்ஹவுசென் சித்திரவதை முகாமில் காவலாளியாக இருந்த நபர் அந்த முகாமில் 3,518 பேரின் கொலைக்கு உதவியாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 1936 ஆம் ஆண்டு சச்சென்ஹவுசென் சித்திரவதை முகாம் பெர்லினுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளது.முகாமில் இருக்கும் மக்களை எலிகளை வைத்து பரிசோதனை செய்வது போல் சிதரவதைக்குள்ளாக்கப்பட்டார்கள .
இதன் பின்னர் அந்த முகாமில் இருந்தவர்களை பரிசோதனை முயற்சிக்காக கொடூரமாக கொன்று குவித்துள்ளார்கள் விஷவாயு செலுத்தி பல மில்லியன் யூதர்களைக் கொள்வதற்கு ஒரு முன்னோட்டமாக இந்த முகாம் இருந்துள்ளது .இந்த கொடூர செயலுக்கு உதவியாக இருந்த அந்த முகாமின் காவலாளிக்கு இப்போது நூறு வயாதாகிறது.அந்த முகாமில் சுமார் 200,000 பேர் அடைக்கப்பட்டு இருந்ததாக கருதப்படுகிறது .
இந்த சம்பவம் குறித்து அந்த நூறு வயது மதிக்கத்தக்க நபரை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு தகுதியாகவே இருப்பதாக கூறுகிறார்கள். இதனைக் குறித்து இன்டர்நேஷனல் ஆஸ்சக்விட்ஸ் கமிட்டி என்ற அமைப்பின் துணைத் தலைவரான கிறிஸ்டோப் ஹியூபனர் என்பவர் குற்றவாளிக்கு எவ்வளவு வயதானாலும் சரி எவ்வளவு காலமானாலும் சரி நீதி நிலைநாட்டபடுவது தவறாது என்று கூறியுள்ளார்.