தேர்தல் பரப்புரைக்காக சென்ற உதயநிதியிடம் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் பேட் கேட்டு மனு அளித்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் ஸ்டாலின் விடியலை நோக்கி என்று பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து உதயநிதி ஸ்டாலினும் சில பகுதிகளில் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஆண்டிபட்டி சென்றிருந்த உதயநிதி ஸ்டாலினிடம் அந்த பகுதியில் இருந்த சிறுவர்கள் கிரிக்கெட் பேட் கேட்டு மனு அளித்தனர். இதையடுத்து அந்த சிறுவர்களை அழைத்து உதயநிதி செல்பி எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.