பிக்பாஸ் சனம் ஷெட்டியை முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் பாராட்டியுள்ளார் .
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்று சீசன்கள் நிறைவடைந்து சமீபத்தில் நான்காவது சீசனும் வெற்றிகரமாக நிறைவடைந்தது . இந்த சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்த போட்டியாளர்களில் ஒருவர் சனம் செட்டி . இவரும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷனும் காதலித்து திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
இதன் பின் திடீரென தர்ஷன் சனம் ஷெட்டியை திருமணம் செய்ய முடியாது என்று கூறியதாகவும் இதையடுத்து இந்த விவகாரம் காவல்துறை வரை சென்றதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தர்ஷன் ‘பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சனம் செட்டி சிறப்பாக விளையாடினார் அவருக்கு எனது வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார் .