சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் பிறப்பு விகிதம் 30 சதவீதமாக குறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது சீனாவில் “ஒரு குழந்தை கொள்கை” என்று குடும்ப கட்டுப்பாடு விதியானது கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சீனாவில் அதிகமாக முதியவர்கள் தான் உள்ளனர்.
ஆனால் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் குறைய தொடங்கியுள்ளனர். இதனால் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்தும் நோக்கில் கடந்த 2011ம் வருடம் முதல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரண்டு குழந்தைகள் பெற்றுகொள்ளலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இது போன்ற கடுமையான விதிகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட பின்பும் கடந்த நான்கு வருடங்களாக குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே தான் வருகிறது. இதில் கடந்த 2020 ஆம் வருடத்தில் பிறப்பு விகிதமானது அதற்கு முந்தைய வருடத்தை விட 30% ஆக குறைந்திருக்கிறது. அதாவது 2020 வருடத்தில் 10.4 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் குழந்தைகளின் வளர்ச்சிக்குரிய திட்டத்தில் சீனா தோல்வியை சந்தித்துள்ளது.