Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் பெரிய தப்பு… அரசாங்க பணம் தனி நபர் கணக்கில்… பணி இடைநீக்கம் உத்தரவு…!!

அரசுக்கு செலுத்தவேண்டிய பணத்தை செலுத்தாமல் பணம் கையாடல் செய்ததாக நகராட்சி ஊழியரை பணி இடைநீக்கம் செய்து ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை நகராட்சியில் கண்ணன் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நகராட்சியில் கணக்காளராக பணிபுரிகிறார். இந்நிலையில் 2019-2020ஆம் நிதியாண்டிற்கான தணிக்கை நடத்தப்பட்டபோது, நகராட்சியில் இருந்து சேவை வரி, வருமான வரி மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு செலவிடப்பட்ட தொகை ஒப்பந்ததாரர் அவர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்டது போக ஜி.எஸ்.டி போன்றவற்றை அந்தந்த இடங்களுக்கு அரசு கணக்கில் வங்கியில் செலுத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை.

ஆனால் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் அந்த தொகையை ஊழியர் கண்ணன் தனது வங்கி கணக்கில் செலுத்தி பணம் கையாடலில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தணிக்கை குழுவின் அறிக்கையில் தான் எவ்வளவு தொகை கையாடல் செய்யப்பட்டுள்ளது என்ற முழுவிவரம் தெரியவரும் என்று நகராட்சி அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில நாட்களாக பணிக்கு வராத காரணத்தினாலும், அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை கையாடல் செய்ததன் காரணத்தினாலும் நகராட்சி ஆணையர் கண்ணனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவானது கண்ணனின் முகவரிக்கு பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்டது.

Categories

Tech |