எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தமிழ் வாடிக்கையாளர்கள் மற்ற வங்கி ஏடிஎம்களில் மாதத்திற்கு மூன்று முறை இலவசமாக பண பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் பரிவர்த்தனை மேற்கொண்டால் ஐந்து முறை இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.