Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“அதிகமாக டீ குடிக்கிறீங்களா”…? உங்களுக்கு இந்த பிரச்சனையெல்லாம் வருமா…. கவனமாய் இருங்க..!!

மிக அதிகமாக பசிக்கும் நேரத்தில் ஒரு டீ குடித்தால் போதும் என்று நினைப்பவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வாக கட்டாயம் இருக்க வேண்டும்.

சிலர் தம் அன்றாட வாழ்க்கையில் டீ இருந்தால் மட்டும் போதும் சாப்பாடே தேவையில்லை என்று நினைப்பவர்கள் உண்டு. காலை ஒரு வேளை மாலை ஒருவேளை டீ குடிப்பது போதுமானது. அதனால் எந்த பிரச்சனையும் வராது. இடையில் தேவையில்லாத நேரங்களில் டீ அருந்துபவர்கள் மிகவும் டீக்கு அடிமையானவர்கள் குடும்பத்திற்கு ஒருவராவது இருப்பார்கள். அதிகமான டீயை எடுத்துக்கொண்டால் எந்த விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை குறித்து தெரிந்து கொள்வோம்.

அடிக்கடி டீ குடிப்பவர்கள் அந்த நேரம் வந்தால் கண்டிப்பாக டீ குடிக்க தோன்றும். இல்லை என்றால் தலைவலி மனதளவில் உண்டாகும். டீ குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்வார்கள். ஆனால் ஆரோக்கியத்தைக் கெடுக்கவே செய்யும். ஆய்வுகள் சொல்லும் காரணங்களை குறித்து தெரிந்து கொள்வோம்.

தூக்கமின்மை:

மூன்று கோப்பை அளவு தேநீர் என்பது பரவாயில்லை. ஆனால் அதற்கு மேல் தேநீர் அருந்தும் போது இன்னும் கபைன் நச்சுக்கள் குடலில் தங்கிவிடும். மேலும் மனதில் அமைதி இன்மையே வழிவகுக்கும். மேலும் இரவு பணி செய்யும் போது டீ குடித்தால் உறக்கம் வராது என்று சொல்வார்கள். தூக்கமின்மை பிரச்சனையால் மலச்சிக்கல், சோர்வு. உடல் மந்தம் போன்றவை ஏற்படும்.

இரும்புச் சத்து

உடலுக்கு இரும்புச் சத்து போதிய அளவு இருக்க வேண்டும். டீயை தொடர்ந்து குடிக்கும்போது டானிசி வேதிப்பொருள் உடலில் இரும்புச் சத்துக்களை உறிஞ்சி எடுக்கின்றது. இதனால் உடலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறைகிறது.

மலசிக்கல்:

தேநீர் குடித்தால் மலம் கழியும் என்று பெரும்பாலோனோர் தினமும் காலையில் எழுந்ததும் டீயை வழக்கமாக கூறுகிறார்கள். அதேநேரம் அளவுக்கதிகமான டீயை குடித்தால் மலச்சிக்கல் பிரச்சினை உண்டாகும்.

கரு கலைவு:

கரு உண்டாவதற்கு முக்கிய காரணம் டீ. அதிலும் கரு உண்டான தொடக்கத்தில் முதல் மூன்று மாதங்களில் கண்டிப்பாக டீயை குடிக்கக் கூடாது. பெண்களுக்கு டீயில் இருக்கும் காபின் பொருள் கருகளைப்பை உருவாக்குகிறது.

அதிகம் டீ குடிக்கும்போது கீமோதெரபி மருந்துகள் கொடுக்கும்போது அவை வேலை செய்வதை தடுக்கிறது. இதனால் நோய் குணமாவது அதிக காலம் பிடிக்கிறது. டீ குடிப்பதை தவிர்க்கலாமா, ஆரோக்கியப் பிரச்சினை வருமா  என்று டீயை நிறுத்திவிட வேண்டாம். தினமும் அளவாக குடித்தால் நல்லது. நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று கப் டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. அதிக அளவிற்கு 6 முதல் 10 என்பது மிகவும் மோசமான பழக்கம். இந்த பிரச்சனையை கைவிட்டால் தான் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Categories

Tech |