கொடிய விஷம் கொண்ட பாம்பு என்று பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீட்டை திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 % இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவை கடந்த மத்திய பாஜக அரசு நிறைவேற்றியது. ஆனால் தமிழகம் இந்த சட்ட மசோதாவை எதிர்த்து வந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற தமிழக சட்டபேரவை கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் நீட் தேர்வில் சமூக நீதியை பறிகொடுத்து விட்டோம். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு தமிழக அரசின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பியதோடு பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 % இட ஒதுக்கீடு கொடிய விஷம் கொண்ட பாம்பு என்று விமர்சித்துள்ளார்.