Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“பிளாஸ்டிக் பாக்ஸில் சாப்பிடுகிறீர்களா…” இனிமே சாப்பிடாதீங்க…. ஆண்மை குறைபாடு ஏற்படுமா…!!

பிளாஸ்டிக் பாக்ஸில் சாப்பிடுபவர்களுக்கு ஆண்மை குறைபாடு வரும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் நம் உடலுக்கு செல்வதால் நம் உடலில் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் நமது உடலுக்கு என்னென்ன கேடுகள் உண்டாகிறது என்பதை குறித்து இதில் பார்ப்போம்.

எளிதில் மக்கும் தன்மை அற்ற பொருளில் முதன்மை இடத்தில் உள்ளது பிளாஸ்டிக். நவநாகரீக உலகில் பிளாஸ்டிக் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளது பிளாஸ்டிக் டப்பாக்கள் மூலம் சமீபகாலமாக, பிளாஸ்டிக் மாசு இந்த உலகில் பெருமளவில் அதிகரித்து வருவதால் உடலுக்கு தீமைகளும் அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றது. நம்மை  சுற்றி அதிகம் பிளாஸ்டிக் பொருள்கள் நிறைந்துள்ளது. பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட உணவை மற்ற பாத்திரங்களுக்கு மாற்றாமலேயே அதிலேயே உண்பது மிகவும் ஆபத்தானது.

இவ்வாறு சாப்பிடுவதால் பிளாஸ்டிக் நேரடியாக நம் உடலுக்குள் செல்கின்றது. கர்நாடக மாநிலத்தில் முடி உதிர்வு பெருமளவு அதிகரித்து வந்தது. அதன் காரணமாக பலரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. 92% ரத்தத்தில் பிளாஸ்டிக் பொருள் தயாரிக்க பயன்படுத்தும் பிபிஏ என்ற வேதிப்பொருள் அதிக அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தான் அவர்களுக்கு முடி உதிர்வு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

பிபிஏ 1960ஆம் ஆண்டு முதல் தொழிற்சாலைகளில் பிளாஸ்டிக் தயாரிக்க பிபிஏ என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டது. இந்த வேதிப்பொருள் இதய நோய்களை ஏற்படுத்தும். பிபிஏ மூளை மற்றும் ஹார்மோன் சுரத்தல் பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் பிபிஏ இல்லாதது என்று குறிப்பிட்டு இருக்கும். ஆனால் இது பாதுகாப்பானது என்று முழுமையாக சொல்லிவிட முடியாது. எந்த ஒரு பிளாஸ்டிக் பொருளையும் பிபிஏ இல்லாமல் தயாரிக்க முடியாது. சில நிறுவனங்கள் அதற்கு பதிலாக பிபிஎஸ் என்பதை பயன்படுத்துகின்றனர். இதுவும் நமது உடலுக்கு அதிக அளவு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஊறவைத்த வாசனை மற்றும் நிறம்:

பிளாஸ்டிக் கவரில் உணவை அடைத்து வைத்து இருப்பதால் நம் உடலுக்கு நாமே ஆபத்தை தேடி அழைப்பது என்று அர்த்தம். பிளாஸ்டிக்கில்  உள்ள ஓட்டை  வடிவமானது உணவு வகைகளின் மீது ஊறவைத்த வாசனை மற்றும் நிறத்தை வரவழைக்கும். இது மனிதர்கள் பெரும்பாலும் விரும்பத்தகாத மனமாக உள்ளது.

உடல் பருமன்

உணவை அடைத்து வைத்து சாப்பிடுவது நம் உடலுக்கு உடல் பருமன் போன்ற விஷயங்களை ஏற்படுத்துகின்றது. எலியிடம் நடத்தப்பட்ட சோதனையில் பிபிஏ வேதிப்பொருள் அதன் உடலில் இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. இதன் காரணமாக உடலில் அதிக அளவு கொழுப்புகள் சேர்ந்து உடல் பருமன் அதிகரிக்கிறது.

மலட்டுத்தன்மை

பிளாஸ்டிக் கேனில் அடைத்து வைத்த உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை பிரச்சனை ஏற்படுகின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றது அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் பிளாஸ்டிக் உணவுப் பொருட்களின் காரணமாக ஐந்தில் ஒருவர் மலட்டுத்தன்மையால்  பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

Categories

Tech |