வீட்டு வாடகையை பேடிஎம் செயலி மூலம் செலுத்தினால் ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாம் வாங்கும் சம்பளம் ஒவ்வொரு மாதமும் வீட்டு வாடகையை செலுத்திவதிலேயே கரைந்துவிடுகிறது. தற்போதைய காலத்தில் சொந்த வீடு என்பது மிகவும் சிரமமான ஒன்று. இதுபோன்ற சூழலில் வீட்டு வாடகை செலுத்தும் போது உங்களுக்கு ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் கிடைத்தால் எவ்வளவு உதவியாக இருக்கும். அப்படி ஒரு திட்டத்தை பேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது.
பேடிஎம் செயலி மூலம் பணம் அனுப்புவது, ரீசார்ஜ் செய்வது, சிலிண்டர் புக்கிங், மின்சார கட்டணம் போன்ற பல்வேறு சேவைகள் உள்ளது. தற்போது புதிய சேவையை இணைத்துள்ளது. வீட்டுவாடகை கட்டுவதற்கு இனி பேடிஎம் மூலமாக செய்தால் பேடிஎம் உங்களுக்கு ஆயிரம் ரூபாயை கேஷ் பேக் ஆக தருகின்றது.
பேடிஎம் மூலம் வீட்டு வாடகை செலுத்துவது எப்படி?
பேடிஎம் ஆப்பில் Recharge & Pay Bills என்ற வசதியைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின்னர் Rent Payment என்ற ஆப்சனைத் தேர்வு செய்து Proceed கொடுக்கவும்.
வீட்டு உரிமையாளரின் வங்கிக் கணக்கு எண், IFSC code, கணக்குதாரரின் பெயர் போன்றவற்றைப் பதிவு செய்ய வேண்டும்.
மொபைல் எண் கொடுப்பது கட்டாயம் இல்லை.அதன் பின்னர் Proceed கொடுக்கவும்.
வீட்டு வாடகைத் தொகையைப் பதிவிட்டு Proceed to pay என்பதை கிளிக் செய்யவும்.
உங்களது கிரெடிட் கார்டு விவரத்தைத் தேர்வுசெய்து கட்டணதை செலுத்தவும். சில நிமிடத்தில் வீட்டு வாடகை உரிமையாளரின் வங்கிக் கணக்கில் டெபாசிட் ஆகிவிடும்.