வீட்டு வாடகையை ஆன்லைன் மூலம் வீட்டு வாடகை செலுத்துபவர்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கு வழங்கப்படும் என Paytm நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் நிதி சேவை தளமாக திகழும் Paytm அதன் வாடகை கட்டண அம்சத்தை மேலும் விரிவாக்குவது அறிவித்துள்ளது. அதன்படி தற்போது வாடகையில் இருக்கும் நபர்கள் மாதாந்திர வாடகையை உடனடியாக தங்கள் கிரெடிட் கார்டுகள் மூலம் தங்கள் வீட்டு உரிமையாளர்களின் வங்கி கணக்கிற்கு மாற்றலாம். இது மாதிரியான பரிவர்த்தனைகளுக்கு ஆயிரம் ரூபாய் வரை கேஷ்பேக் வழங்கப்பட உள்ளது.
ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் கேஷ்பேக் சம்பாதிப்பதை தவிர, பயனர்கள் கிரெடிட் கார்டு புள்ளியையும் அதில் சேர்க்க முடியும். இதனைத் தொடர்ந்து வீட்டு உரிமையாளர்களுக்கு வாடகை பணம் செலுத்துகின்ற போது, வாடகையில் இருக்கின்ற நபர் பேட்டியம் முகப்பு திரையில் recharge and pay bills என்ற பிரிவில் இருந்து rent peyment என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதன்படி உங்கள் பணத்தை வீட்டு உரிமையாளர்களுக்கு பரிமாற்றலாம். UpI டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் போன்ற பிற கட்டண முறைகள் மூலம் வாடகை செலுத்தும் நெகிழ்வு தன்மையை தருவதாக பேடிஎம் தெரிவித்துள்ளது. மேலும் கல்வி கட்டணம், வீட்டில் வேலை செய்பவர்களின் சம்பளம் ஆகியவற்றுக்கு பணம் செலுத்தவும் கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் முறை செயல்பட்டுள்ளது என்று Paytm துணைத் தலைவர் கூறியுள்ளார்.