தண்ணீர் குடிப்பதனால் நம்முடைய உடலில் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.
நீரின்றி அமையாது உலகு என்பது பழமொழி. இதற்கேற்ப உலகில் வாழும் எந்த ஜீவன்களும் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ முடியாது. நம்முடைய உடலின் அவசியமான ஒன்றாக நீர் அமைகிறது. சாப்பாடு கூட சாப்பிடாமல் கூட இருக்கலாம். ஆனால் தண்ணீர் அருந்தாமல் இருக்க முடியாது. உலகம் மட்டும் தண்ணீரால் நிரம்பியது அல்ல. நம்முடைய உடலின் பெரும்பகுதி தண்ணீரால் தான் ஆனது. ஆகையால் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒரு நாளைக்கு நாம் அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும். இதன் மூலம்பல்வேறு பிரச்சினைகள் சரி செய்யப்படுகின்றது. நாம் செய்யும் சமையலில் இருந்து கழிவறை உபயோகம் வரை தண்ணீர் அன்றாடம் தேவைக்கு பயன்படுகிறது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிப்பதால் அதிகப்படியான உணவு எடுப்பது தடுக்கப்படுகிறது. இதனால் உடல் எடை அதிகரிப்பு தடுக்கப்படுகின்றது. தலைவலி, சோர்வு, சரும வறட்சி, ஆகியாய் வராமல் தடுக்கிறது.