தமிழக மக்கள் தினகரனை நம்பினால் நடுரோட்டில் தான் இருக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை வேலூரில் எடப்பாடி முதலமைச்சர் பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் டிடிவி தினகரனை பற்றி சில கருத்துக்களை கூறினார். அதில் தினகரன் திமுகவிற்கு மறைமுகமாக உதவுவதாக கூறினார். தினகரனுக்கு முதலமைச்சர் பழனிச்சாமி ஒன்றை தெரிவித்தார். டிடிவி தினகரன் என்ன முயற்சி செய்தாலும் அதனை அதிமுக கட்சியை முறியடிக்கும் என்று உறுதியாகக் கூறினார். அதிமுகவில் எந்த உறுப்பினராகவும் இல்லாத டிடிவி தினகரன் எவ்வாறு அதிமுகவை கைப்பற்ற முடியும். தினகரனை நம்பி ஏற்கனவே உறுப்பினர்கள் 18 பேர் நடுத்தெருவில் இருப்பதா பிரச்சாரத்தில் கூறினார் என்னும செய்தி வெளியானது.