மத்திய அரசு வேலை நாட்கள் தொடர்பாக விரைவில் புதிய நெறிமுறைகளை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும், ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அதன்படியும் மக்கள் அனைவரும் வேலைக்குச் செல்ல தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் மத்திய அரசு வேலை நாட்கள் தொடர்பாக விரைவில் புதிய நெறிமுறைகளை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் இந்த புதிய முறை நடைமுறைக்கு வந்தால் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டியிருக்கும். எனினும் ஊழியர்கள் பாரதி 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டியது கட்டாயம். ஒரு ஊழியர் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரமும் வாரத்தில் நான்கு நாட்களில் 48 மணி நேரமும் பணிபுரிந்தால் மீதமுள்ள மூன்று நாட்களுக்கு அவர் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.