தமிழகத்தில் சமீபகாலமாக சைபர் கிரைம் அதிகரித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போதைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் நவீனமான வாழ்க்கைக்கு மாறி கொண்டிருக்கின்றனர். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தங்களின் தேவைகள் அனைத்தையும் செல் போன் மூலமாகவே பூர்த்தி செய்து கொள்கிறார்கள். ஆனால் அதில் சில ஆபத்துகளும் நிறைந்துள்ளன. தமிழகத்தில் சமீபகாலமாக சைபர் கிரைம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் எந்த ஒரு பரிசுப் பொருட்கள் Reward Points, cashback offers- களை பெற உங்களிடம் கிரெடிட் கார்டு, டெபிட் கார்ட் விபரங்களை யோ அல்லது ஓடிபி என்னையோ அளிக்க தேவையில்லை. மீறி கேட்கப்பட்டால் அத்தகைய சலுகைகளை மறுத்து விடவும். இல்லை என்றால் உங்களிடம் இருந்து பணம் திருடப்படலாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால் பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்கள் செல்போனில் வரும் மெசேஜை அல்லது போன் கால் நம்பி எதையும் செய்ய வேண்டாம்.