நடிகை காஜல் அகர்வால் சிறுவயதிலிருந்தே தனக்கு ஆஸ்துமா பிரச்சினை இருப்பதாக கூறியுள்ளார் .
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால் . சமீபத்தில் இவர் தொழிலதிபர் கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்கு பின்னரும் நடிகை காஜல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் . தற்போது இவர் இந்தியன் 2, ஆச்சார்யா ,பாரிஸ் பாரிஸ், ஹேய் சினாமிகா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் . இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனக்கு சிறுவயதில் இருந்தே ஆஸ்துமா பிரச்சனை இருப்பதாக தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து நடிகை காஜல் அகர்வால் ‘எனக்கு 5 வயதாக இருக்கும்போது ஆஸ்துமா பிரச்சனை இருப்பது தெரியவந்தது. இதன்பின் உணவு கட்டுப்பாட்டுடன் இருந்து வந்தேன் . ஆனால் வளர்ந்த பிறகும் இந்தப் பிரச்சினை சரியாகவில்லை . குளிர்காலம் வரும்போதும் தூசு, புகையை எதிர்கொள்ளும் போதும் ஆஸ்துமா அதிகமானது . இதனால் இன்ஹேலர் பயன்படுத்தத் தொடங்கினேன். எனக்கு உடனே வித்தியாசம் தெரிந்தது . நம் நாட்டில் லட்சக்கணக்கானோருக்கு இந்த நோய் இருக்கிறது . பொது இடங்களில் அவர்கள் இன்ஹேலரை பயன்படுத்தத் தயங்குகின்றனர் . இந்த தயக்கத்தை நீக்க வேண்டும் ‘ என்று கூறியுள்ளார் .