தடுப்பூசிகள் நல்ல பயன் அளிப்பதால் பொதுமுடக்கத்திற்கு அவசியமில்லை என்று பொதுமக்களும், அரசியல்வாதிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பைசர் மற்றும் ஆக்ஸ்போர்டு ஆகிய இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளும் கொரோனாவை எதிர்க்கும் தன்மை கொண்டுள்ளது என்று நம்பிக்கை தெரிவிக்கும் வகையில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வில், பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் 80 வயது மேற்பட்டவர்களில் 64 சதவீத பேருக்கும் 80 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 65 சதவீத கொரோனாவில் இருந்து பாதுகாப்பு அளிப்பதாக தெரியவந்துள்ளது. இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு 79 முதல் 84 சதவீதம் பாதுகாப்பளிக்கிறது.
ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிகளும் இதனைப் போலவே பையன் கிடைத்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகளைக் கொண்டு தடுப்பூசிகள் நல்ல பையன் அளிப்பதால் பொது முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் பொதுமக்களுக்கும்,பொதுமுடக்கத்தை நீட்டிக்க வேண்டுமா என்ற அச்சத்தில் இருந்த அரசியல்வாதிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.