இங்கிலாந்தில் வயது முதிர்ந்த ஜோடிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதற்கு முன்பு இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
இங்கிலாந்தில் பார்ட்டிங்டன் என்ற இடத்தை சேர்ந்த மார்கரெட் மற்றும் டெரிக் ஃபிரித் என்ற 97 வயது ஜோடிகள் 70 ஆண்டுகளாக இணைபிரியாமல் வாழ்ந்து வந்துள்ளனர். இருவருக்கும் சமீபத்தில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அப்போது அடுத்தடுத்த படுக்கையில் இருந்த இருவரும் கைகளை பிடித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் ஆறுதல் கூறி கண்ணீர் மல்க புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இறுதியாக மூன்று நாட்கள் இடைவெளியில் மார்கரெட்டும், டெரிக்கும் உயிரிழந்தனர். இருவரும் கைகோர்த்து ஆறுதல் கூறிய புகைப்படம் இணையத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகின்றது.