Categories
அரசியல் மாநில செய்திகள்

“சசிகலா ஒரு காலாவதியான மாத்திரை” பக்கவிளைவை ஏற்படுத்தும் – வைகைச்செல்வம் விமர்சனம்…!!

சசிகலா ஒரு காலாவதியான மாத்திரை அது வேலை செய்யாது என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சசிகலா சிறைத்தண்டனைக்கு பிறகு சென்னை வந்துள்ளார். இதனால் அதிமுகவில் குழப்பம் ஏற்படும் என்று மற்ற கட்சியினர் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் அதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஒரு சில அமைச்சர்கள் கூட சசிகலாவின் பக்கம் மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது .இந்நிலையில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அதில் சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக அறிவிப்பதற்கு தீர்மானம் எழுதி முதலில் வாசித்தவன் நான் தான். ஆனால் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. சசிகலா ஒரு காலாவதியான மாத்திரை. அந்த காலாவதியான மாத்திரை மூலம் நோயைக் குணப்படுத்த முடியாது. அது பக்கவிளைவை தான் ஏற்படுத்தும். தற்போது இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவருமே சிறப்பாக கட்சியை நடத்திச் செல்கிறார்கள். மேலும் இந்த இருவரின் தலைமையில் உள்ள கட்சி நல்ல நிலை முன்னேற்றம் அடையும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |