இன்ஸ்டாகிராம் தனது பயனாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன.தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்றவாறு நிறுவனங்கள் அனைத்தும் புது புது அப்டேட் செய்து வருகின்றன.
அதன்படி இன்ஸ்டாகிராம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் புதிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் தங்கள் நீக்கி விட்ட பதிவுகளை மீண்டும் மீட்டு எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அந்தப் பதிவு 30 நாட்களுக்குள் நீக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இதற்காக recently deleted என்ற புதிய அம்சம் இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்டில் வழங்கப்பட்டுள்ளது.