Categories
சினிமா தமிழ் சினிமா

இரண்டாவது திருமணத்திற்கு ரெடியாகும் டிடி… மாப்பிள்ளை இவர்தானா?…!!!

பிரபல தொகுப்பாளினி டிடி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது .

விஜய் தொலைக்காட்சியில் பல ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தொகுப்பாளினி டிடி (திவ்ய தர்ஷினி ). இவர் தனது கலகலப்பான பேச்சால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் . இவர் ஒரு சில திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் . மேலும் இவர் ஸ்ரீகாந்த் என்ற தனது நீண்டநாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இதன் பின் சில பிரச்சினைகளால் இருவரும் பிரிந்து விட்டனர் .

Image result for anchor dd

இந்நிலையில் தொகுப்பாளினி டிடி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது . கேரளாவை சேர்ந்த தொழிலதிபரை அவர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது . ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் டிடி தரப்பிலிருந்து வெளியாகவில்லை. இதனால்  இந்த தகவல் உண்மையா? அல்லது வதந்தியா ?என்பது கூடிய விரைவில் தெரியவரும் .

 

Categories

Tech |