நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் கட்டவுள்ள புதிய வீட்டிற்கு இன்று பூமி பூஜை போடப்பட்டது .
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் தனுஷ் பாடகர் ,பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல திறமைகள் கொண்டவர் . தற்போது இவர் ஜகமே தந்திரம், கர்ணன் ,டி43 போன்ற திரைப் படங்களை கைவசம் வைத்துள்ளார் . இந்நிலையில் நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் கட்டவுள்ள புதிய வீட்டிற்கு இன்று காலை பூமி பூஜை போடப்பட்டது.
இதில் தனுஷ், ஐஸ்வர்யா ,ரஜினிகாந்த் ,லதா ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர் . நடிகர் ரஜினிகாந்த் இல்லமும் போயஸ் கார்டனில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது .