Categories
உலக செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…? கொடூரமான திட்டம் போட்ட ஊழியர்… அறிந்தவுடன் அதிர்ந்த்துபோன முதலாளி…!!

துருக்கியில் கார் டீலர் உரிமையாளரிடம் ஊழியர் ஒருவர் பணம் திருடி சென்றதுடன் கொலை திட்டம் தீட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

துருக்கி நாட்டில் உள்ள அடானா என்ற பகுதியை சேர்ந்த கார் டீலர் உரிமையாளரான இப்ராகிம் உன்வெர்த்தி. கடந்த மூன்று வருடங்களாக இவரிடம் ஒரு ஊழியர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கார் விற்பனை செய்ததில் சுமார் 22 லட்ச ரூபாய் பணத்தை அந்த பணியாளரிடம் இப்ராகிம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை அலுவலகத்தில் வைக்குமாறு கூறி அனுப்பிவைத்துள்ளார்.

அதன்பிறகு அந்த ஊழியரை தொடர்புகொண்டுள்ளார். ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை. அதன் பிறகு அந்த ஊழியர் இப்ராஹிமை மறுநாள் தொடர்பு கொண்டு தான் அதிக கடனில் தவிப்பதாகவும், நீங்கள் தந்த பணத்தை திருடி விட்டேன் என்றும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதுமட்டுமன்றி பணத்தை எடுத்துச் செல்வதற்கு முன்பு இப்ராகிம் வழக்கமாக குடிக்கும் பானத்தில் கொரோனாவால்  பாதிக்கப்பட்ட நோயாளியின் எச்சிலை பணம் கொடுத்து வாங்கி அதில் கலந்துவைத்துவிட்டு சென்றுள்ளார்.

அதாவது இப்ராகிம் கொரோனாவால் உயிரிழக்க சதி திட்டம் தீட்டியுள்ளார். ஆனால் இப்ராஹிம் அதிர்ஷ்டவசமாக அந்த எச்சில் கலந்த பானத்தை பருக வில்லை. இதனைத்தொடர்ந்து அந்தப் பணியாளர் உன்னை கொரோனாவால் கொலை செய்யமுடியவில்லை. இதனால் உன் தலையில் சுட்டுக் கொல்ல போகிறேன் என்று குறுஞ்செய்தி ஒன்றை இப்ராஹிமிற்கு அனுப்பியுள்ளார்.  இதனால் இப்ராகிமின் வீட்டில் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இப்ராஹிம் கூறுகையில், இது போன்று வித்தியாசமான முறையில் கொலை செய்யும் திட்டத்தை எங்குமே நான் பார்த்ததில்லை. இந்த பானத்தை குடிக்காமல் இருந்ததற்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். அவர் என்னை சுட்டாலும் பரவாயில்லை அதில் நான் மட்டுமே பாதிப்படைவேன். ஆனால் இதுபோன்ற வைரசினால் என்னை கொலை செய்ய முயன்றால் அது என் குடும்பத்தாரையும் அதிகமாக பாதிக்கும். ஏனெனில் என் பெற்றோருக்கு அதிக வியாதிகள் உள்ளன. ஆனால் எப்படியோ நானும் என் பெற்றோரும் தப்பித்திருக்கிறோம் என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அந்த பணியாளரின் மீது அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டது, கொலை முயற்சி போன்றவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

Categories

Tech |