மும்பையில் தொடரும் கனமழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
கடந்த நான்கு நாட்களாக மும்பை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் அங்குள்ள தெருக்களிலும் , சாலைகளிலும் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகின்றது.பல்வேறு பகுதிகளில் மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மும்பை மாநகரமே தண்ணீரில் மிதக்கிறது. தொடர் மழையால் மக்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
போக்குவரத்து சேவை முடக்கம் :
மும்பையில் தொடர் மழை வெள்ளம் காரணமாக சாலை போக்குவரத்து , விமான போக்குவரத்து மற்றும் இரயில் போக்குவரத்து என முற்றிலும் முடங்கியுள்ளது. ஏராளமான ரயில்கள் சேவையை தொடராமல் ரயில் நிலையங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அதே போல மும்பை சர்வதேச விமான நிலையமும் மழை வெள்ள நீரில் மூழ்கி இருக்கின்றது. இதனால் விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. 54 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
கொட்டி தீர்க்கும் கனமழை தொடர்ந்து நீடித்து வருவதால் அடுத்து மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மும்பையில் இன்று பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.
மக்கள் பலி :
அரசு நிவாரணம் :
மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் ஏற்பட்ட வெல்ல பெருக்கில் சுவர் இடிந்து , வெள்ளத்தால் உயிரிழந்த மக்களில் குடும்பத்திற்கு அம்மாநில அரசு ரூ.5 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளது.
தயார் நிலையில் மீட்புப்பணி :
பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மழை தொடர்ந்து பெய்யும் என்ற எச்சரிக்கையை அடுத்து தயார் நிலையில் மீட்பு குழுவினர் இருந்து வருகின்றனர்.