Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பயிர்கள் ரொம்ப பாதிக்கப்படுது… சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்ட சாயக்கழிவு நீர்… அதிரடியாக ஆலைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்…!!

கலெக்டர் கருணாகரனின் உத்தரவின்பேரில் சட்டவிரோதமாக காலிங்கராயன் கால்வாயில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றி 28 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள காலிங்கராயன் கால்வாய் மூலம் சுமார் 14 ஆயிரத்து 700 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று பயனடைகின்றன. மேலும் விவசாயிகள் இந்த கால்வாய் பகுதியில் வாழை, நெல், மஞ்சள் போன்ற பயிர்களை பயிரிட்டு உள்ளனர். இந்நிலையில் சட்டவிரோதமாக சுத்திகரிப்பு செய்யப்படாத சாயக்கழிவு நீரை கடந்த சில வாரங்களாக காலிங்கராயன் கால்வாயில் வெளியிடுவதாகவும், விளைநிலங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் மொடக்குறிச்சி அ.தி.மு.க எம்.எல்.ஏ சிவ சுப்பிரமணியத்திடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் ஈரோடு வெண்டிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிவசுப்பிரமணியன் எம்.எல்.ஏ நிர்வாகிகளுடன் திடீரென விடிய விடிய ஆய்வு செய்துள்ளார்.

அப்போது பூஜிய முறையில் தண்ணீரை வெளியிடுவதாக அனுமதி பெற்று சாயக்கழிவு நீரை கால்வாய் பகுதியில் வெளியேற்றியது உறுதியாகிவிட்டது. இதனை அடுத்து பொக்லைன் இயந்திரங்களை கொண்டு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட ராட்சச பைப்லைன்களை அகற்றியதோடு, சம்பந்தப்பட்ட ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அனுமதி பெற்று சட்டவிரோதமாக சாயக்கழிவு நீரை காலிங்கராயன் கால்வாயில் வெளியேற்றிய 28 சாய ஆலைகளுக்கு சீல் வைத்து விட்டனர். அதோடு சாயக்கழிவு நீரை சட்டவிரோதமாக வெளியேற்றும் மற்ற ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |