என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனம் பொறியாளர் தேர்வில் எந்த வித முறைகேடும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் பொறியாளர் பணிகளுக்கான நேர்முகத் தேர்வானது என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நேர்முக தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் பல்வேறு தரப்பினரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இந்த தேர்வில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் என்.எல்.சி நிறுவனம் பொறியாளர் தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என கூறியுள்ளது.
இதனையடுத்து பொறியாளர் தேர்வுக்கு 1.11 லட்சம் பேர் விண்ணப்பித்து நிலையில் 59 ஆயிரத்து 545 பேர் தேர்வில் பங்கேற்றனர் என்றும், தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக வெளியான தகவல்கள் அனைத்தும் தவறு என்று தெரிவித்துள்ளனர். அதோடு தேர்வு முழுவதும் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வை வெளிப்படையாக நடத்தியதாகவும் என்.எல்.சி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப் பட்ட 1,552 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 8 பேர் மட்டும்தான் என சர்ச்சை எழுந்துள்ள நிலையில், என்.எல்.சி நிறுவனம் இந்த விளக்கம் கொடுத்துள்ளது.