Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நான் அங்க வெயிட் பண்றேன்… நூதன முறையில் திருடப்பட்ட கார்…. அதிரடியாக கைது செய்த தனிப்படையினர்…!!

நூதன முறையில் ஏமாற்றி காரை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள கோவிந்தசாமி நகரில் ரவி என்பவர் வசித்துவருகிறார். இவர் வடலூர் கார் நிறுத்தத்தில் வாடகை கார் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் விருத்தாசலம் தெரு பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவர் புதுச்சேரிக்கு சவாரி செல்ல வேண்டும் என்று ரவியிடம் கூறி வாடகை பேசி அவரை அழைத்து சென்றுள்ளார். இந்த காரானது இன்டீரியல் சாலையில் வந்தபோது, இருவரும் அங்கு உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் சாப்பிட்டுள்ளனர். அதன்பின் மணிகண்டன் ரவியிடம் தன் சாப்பிட்ட சாப்பாட்டுக்கும், அவருக்கும் சேர்த்து பணத்தை கொடுத்து விட்டேன் எனவும், உனது கார் சாவியையும், யூடியூப் பார்க்க உனது செல்போனையும் தா என்று கூறி ரவியிடம் இருந்து அவற்றை வாங்கி சென்றுள்ளார். அதன் பின் சிறிது நேரம் கழித்து ரவி வெளியே வந்து பார்க்கும்போது, மணிகண்டன் காரை திருடிச் சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல்நிலையத்தில் இதுகுறித்து ரவி புகாரளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சப் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான தனிப்படையினர் அமைத்து அவரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் சேத்தியாத்தோப்பு பகுதியில் பதுங்கி இருந்த மணிகண்டனை தனிப்படை போலீசார் கைது செய்து விட்டனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள குன்னம் பெரும் ஆத்தூர் பகுதியில் வசித்து வரும் அஜித் குமார் என்பவரும் இவருக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. அதோடு இவர்களின் மீது பரங்கிப்பேட்டை  காவல் நிலையங்கள் ஏற்கனவே திருட்டு வழக்கு நிலுவையில் இருக்கின்றது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த காரை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |