பிக்பாஸ் கவினுடனான உறவு குறித்த கேள்விக்கு லாஸ்லியா பதிலளித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா . இந்த நிகழ்ச்சியில் முதலில் நண்பர்களாக பழகி வந்த இருவரும் ஒரு கட்டத்தில் காதலர்களாக மாறினர் . இந்த சீசன் மிக பரபரப்பாக சென்றதற்கு கவின்- லாஸ்லியா காதலும் ஒரு முக்கிய காரணம் என்றே கூறலாம் . ஆனால் இந்த நிகழ்ச்சிக்குப் பின் இருவரும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர் . கவின் லிப்ட் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் . அதேபோல் லாஸ்லியா பிரண்ட்ஷிப் ,கூகுள் குட்டப்பன் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் .
இந்நிலையில் சமீபத்தில் லாஸ்லியா அளித்த பேட்டியில் கவினுடனான உறவு குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் . அதில் ‘எனக்கும் கவினுக்கும் இருப்பது பர்சனல் விஷயம் . அது பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை . அதை விட்டுவிட்டு என் படத்தை பற்றி கேளுங்கள்’ என்று கூறியுள்ளார். மேலும் பிக்பாஸ் வீட்டில் தர்ஷனை அண்ணன் என அழைத்து விட்டு தற்போது அவருக்கு ஜோடியாக படத்தில் நடிப்பது குறித்து பேசிய லாஸ்லியா ‘அது பர்சனல் வாழ்க்கை , இது சினிமா வாழ்க்கை . இருவரும் படத்தில் அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து விட்டு அதன் பின் அதிலிருந்து வெளியே வரப்போகிறோம் அவ்வளவுதான் ‘ என்று கூறியுள்ளார்.