மதுவில் விஷம் கலந்து குடித்து கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவில் தெருவில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக முகம், கைகால் வீக்கத்துடன் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும், இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் சண்முகம் மன உளைச்சலில் இருந்து உள்ளார்.
இந்நிலையில் மனமுடைந்த சண்முகம் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் மயங்கிய நிலையில் இருந்த சண்முகத்தை மீட்டு உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சண்முகம், அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.