Categories
தேசிய செய்திகள்

உலகிலே இதான் பழமை…! 570மில்லியன் ஆண்டு… இந்தியாவில் கிடைத்த விலங்கின் எச்சம்…!!

இந்தியாவில் 570 மில்லியன் பழமை வாய்ந்த விலங்கின் எச்சம் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக அறிய வகை உயிரினமான பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டிக்கின்சனியா எனும் விலங்கின் எச்சம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த எச்சம் மத்திய பிரதேசத்தில் யுனெஸ்கோவின் பழங்கால பீம்பேட்கா கற்பாறை ஆராய்ச்சி மையம் இருக்கும் பகுதியில் ஆடிட்டோரியம்  கேவ் என அழைக்கப்படும் கூரையின் மேல் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த எச்சத்தை ஆராய்ச்சி செய்து பார்த்ததில்  டிக்கின்சனியா என்ற பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த விலங்கின் எச்சம் என்றும் இந்த விலங்கு 17  அங்குலம் நீளம் கொண்டது மற்றும் இது குறைந்தது 541 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பழமை வாய்ந்த எச்சத்தைக்கொண்டு ஆராய்ச்சியாளர்கள் இன்னும் ஆய்வுகள் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |