மிக புகழ்பெற்ற நடிகர் சிவாஜி மகன் ராம்குமார் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தங்கள் ஆட்சியை தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது.
இதற்கு மத்தியில் முக்கிய பிரபலங்கள் சிலர் கடந்த சில மாதங்களாக பாஜகவில் இணைந்து வருகிறார்கள். இந்நிலையில் பாஜகவில் இணைய உள்ள சிவாஜி மகன் ராம்குமார் சென்னை கமலாலயத்தில் எல். முருகனுடன் சந்தித்து பேசி வருகிறார். ராம்குமாரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சிவாஜி ரசிகர் மன்றத்தினர், “காங்கிரஸ் கட்சி தலைவராக, காமராஜரின் சீடராக கடைசி வரை வாழ்ந்து வந்த சிவாஜியின் புதல்வர், பெருந்தலைவரை கொல்ல முயன்ற கூட்டத்தின் பின்னணியில் செயல்படும் கட்சியில் இணைவது எந்த வகையிலும் சிவாஜியின் புகழுக்கு பெருமை சேர்க்காது” என்று தெரிவித்துள்ளனர். அதனால் சற்று பரபரப்பு நிலவி வருகிறது.