அமெரிக்காவில் நதியோரம் கிடந்த சூட்கேசில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வட கரோலினாவில் பிரிட்டனி சமோன் ஸ்மித் என்ற கர்ப்பிணி பெண் கடந்த இரண்டாம் தேதி மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில் நதிக்கு அருகே கிடந்த சூட்கேசில் இளம்பெண்ணின் உடல் இவருடையதாக அந்த பகுதில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். இவர் காணாமல் போன இடத்திற்கு 10 மைல் தொலைவில் நதி ஒன்றின் ஓரமாக சூட்கேஸ் இருந்ததால் காணாமல் போன பெண்தானா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் காணாமல் போன பிரிட்டனி சமோன் ஸ்மித் உடம்பாக இருக்கலாம் என்று எண்ணி உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இச்சம்பவம் கொலையாக இருக்கலாம் என பலகோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றது.