Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி… ஸ்டாலின் அதிரடி வாக்குறுதி…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து மாவட்டங்களிலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தொடங்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தங்கள் ஆட்சியை தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி இன்று தேர்தல் பிரசாரம் செய்த அவர், திமுக ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தொடங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அனிதா சுவர்ச் அகாடமியில் பயிற்சி மேற்கொள்ளும் பெண்களுக்கு வேலை மற்றும் ஊதியத்தை தாண்டி சுய மரியாதையும் உயரும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |