சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று பிரச்சாரம் செய்த தமிழக முதல்வர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எதை சொல்கிறதோ, அதை சாதிக்கும். சொல்லாததையும் சாதிக்க கூடிய ஒரே அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம் தான். இன்றைக்கு கல்வில் சிறக்கின்றது அரசு மாண்புமிகு அம்மாவுடைய அரசு. இந்த பகுதியில் கூட அரசு கலைக்கல்லூரியை கொடுத்து ஏழை எளிய, ஒடுக்கப்பட் , நசுக்கப்பட்ட, விவசாய, தொழிலாளி உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்கும் நாங்கள் தான் வித்திட்டுள்ளோம்.
அதிகமா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வந்து அரசு அம்மாவுடைய அரசு. பாலிடெக்னிக் கல்லூரி, ஐடிஐ கல்லூரி, வேளாண்மை கல்லூரி, மருத்துவ கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரி என பல கல்லூரிகளை தமிழகத்திலே திறந்து உயர்கல்வி படிக்கிற எண்ணிக்கை உயர்ந்து, இந்திய நாட்டிலேயே உயிர் கல்வி படிப்பதில் முதல் மாநிலம் தமிழகம் தான் ஸ்டாலின் அவர்களே…!
உங்களுடைய ஆட்சியில் இப்படி பண்ணிங்களா..? ஏழை மக்கள் உயர்கல்வி படிக்க கூடிய சூழ்நிலை உருவாக்கினீர்களா ? இல்ல. இன்றைக்கு இளைஞர் பட்டாளங்கள் எங்களுக்கு முன்னாடி அணிவகுத்து நிற்ப்பதற்கு காரணம் இதுதான். இவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலே பலன் அனுபவிக்கின்றார்கள். அவர்கள் விசுவாசமாக அரசுக்கு இருக்கின்றார்கள். அவருடைய ஆட்சி காலத்திலே ஏழை மக்களுக்கு இப்படிப்பட்ட திட்டங்கள் கொண்டு வரவில்லை. அதனால் மக்கள் பயன் அடைய வில்லை.
ஆகவே , அம்மாவுடைய அரசு இன்றைக்கு ஏழை மக்களுக்காக திட்டங்களை தீட்டி, அதன் மூலமாக மாணவர்கள், இளைஞர்கள் பலனடைந்து அவர்கள் எங்கள் முன்னாடி அணிவகுத்து இருக்கின்ற காட்சியை பார்த்துக் கொண்டு இருங்கள். இளைஞர்கள் பட்டாளத்தால் இந்த அரங்கம் முழுவதும் நிரம்பி இருக்கின்றது. இளைஞர் பட்டாளங்கள் நிரம்பி இருப்பது சாதாரண விஷயமா ? சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள இளைஞர்கள் பேருமே இங்க வந்து இருக்காங்க என தமிழக முதல்வர் பெருமிதம் கொண்டார்.