Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்… பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தா… கொடூர சம்பவம்…!!!

சென்னையில் முதியவர் ஒருவர் தனது சொந்த பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது.

இந்நிலையில் சென்னையில் டேவிட் என்ற முதியவர் ஒருவர், தனது சொந்தப் பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டேவிட் மகள் தனது தம்பிக்கு பெண் பார்க்க செல்வதற்காக மகளை தந்தையுடன் வீட்டில் விட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது சிறுமி அழுது கொண்டே இருந்திருக்கிறார். அதன்பிறகு விசாரித்தபோது டேவிட் செய்த கொடூரத்தை சிறுமி கூறியுள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த டேவிட் மகள் அவர் மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |