திருவாரூர் மாவட்டத்திலுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்பட்டன.
சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் தேதி சிறைக்குச் சென்ற சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் 4 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித் தனர். அதன்பிறகு கடந்த ஜனவரி 27-ஆம் தேதி 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா, கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டிருந்தார். இதனையடுத்து நேற்று முன்தினம் அவர் தமிழகம் திரும்பியுள்ளார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரின் சொத்துக்கள் அரசுடமை ஆக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சார்ந்த அறிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கில் இறுதித் தீர்ப்பின்படி, மூன்று பேரும் பங்குதாரர்களாக உள்ள ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் லிமிடெட் அரசுடமையாக்கப்பட்டது. சொத்துக்களில் இருந்து பெறப்படும் வாடகை மற்றும் நிலுவை வாடகை உட்பட அனைத்தும் அரசுக்கானது என்று தெரிவித்துள்ளார். இவர்கள் மூன்று பேரின் பெரும்பாலான சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமை ஆக்க பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.