தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் சசிகலா சந்திப்பில் எந்த ஒரு ஜென்மத்தில் நிகழாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன் பிறகு நேற்று முன்தினம் தமிழகம் திரும்பினார். அவரின் வருகையை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். அது மட்டுமன்றி சில பரபரப்பு சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் அமைச்சர் வேலுமணி ஆர் திமுகவில் இருக்கும் தொண்டர்களை தான் நாமெல்லாம் அண்ணன் தம்பிகள் என்று கூறினார் எனவும், அந்தக் கருத்தை ஊடகங்கள் கண், காது மற்றும் மூக்கு வைத்து பெரி தாக்கியதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதனைப்போலவே சசிகலா மற்றும் முதல்வர் பழனிசாமி சந்திப்பு எந்த ஒரு ஜென்மத்திலும் நிகழாது என்று அவர் கூறியுள்ளார்.