சென்னை போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் புதிய வீட்டிற்கு பூமி பூஜை இன்று நடைபெற்றது. அதில் ரஜினி வருகை தந்திருந்தார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தனுஷ். பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்தின் முதல் மகள். இது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
இந்நிலையில் தனுஷ் புதிதாக ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் அருகே வீடு கட்டுவதற்கான பூமி பூஜை இன்று போயஸ் கார்டனில் நடைபெற்றது. அதில் ரஜினிகாந்த் அவரது மனைவி லதா உள்ளிட்ட தனுஷின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் பரவலாகி வருகிறது.