Categories
அரசியல் மாநில செய்திகள்

10,50,000பேருக்கு புதிய வேலைவாய்ப்பு…. கலக்கிய அதிமுக அரசு… காலரை தூக்கி விட்ட எடப்பாடி …!!

நேற்று சோளிங்கநல்லுரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர், 2019 ஜனவரி மாதம் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தினோம். சுமார் மூன்று லட்சத்தி ஐநூறு கோடி தொழில் முதலீட்டை ஈர்த்தோம்.  304 தொழில் வருவதற்கு புரிதல் ஒப்பந்தம் போட்டோம். இப்போ இருபத்தி ஏழு சதவீத தொழில் தமிழகத்தில் தொடங்குவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணி துவங்கி நடைபெற்றிருக்கிறது.

அதன் மூலமாக சுமார் ஒன்றேகால் லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு பெறக்கூடிய சூழலை உருவாக்கி தந்திருக்கிறோம் . இந்த முன்னூற்றி நான்கு தொழிலும் தமிழகத்தில் உருவாகின்ற போது 5,50,000 லட்சம் படித்த இளைஞர்களுக்கு நேரடியாக வேலை கிடைக்கும், மறைமுகமாக 5லட்சம் பேருக்கு கிடைக்கும். 10.50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்த அரசு அண்ணா திமுக அரசு.

இளைஞர்களை படிக்க வைக்கிறோம். படிக்க வைத்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கியுள்ளோம். அதுதான் எங்க அரசின் திட்டம். அதன் மூலமாக இளைஞர்கள் வேலையை பெற்று குடும்பத்தை காக்கின்ற சூழலை நாம் பார்க்கிறோம். இது ஸ்டாலினுக்கு எரிச்சலா இருக்குது. நாங்க என்ன செய்யுறது ? நீ எதுவுமே செய்யல. நீங்க குடும்பத்தையே பார்த்துக்கிட்டு இருந்தீங்க. நாட்டு மக்களை மறந்துதாங்க, நாட்டு மக்கள் உங்களை மறந்துட்டாங்க என முதல்வர் தெரிவித்தார்.

Categories

Tech |