தனக்கு ஐந்து வயதில் இருந்தே ஆஸ்துமா பிரச்சனை இருப்பதாக நடிகை காஜல்அகர்வால் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகியவற்றில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். அவர் சமீபத்தில் தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு ஆஸ்துமா பிரச்சனை இருப்பதாக அதிர்ச்சி தகவலை அவர் வெளியிட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “எனக்கு ஐந்து வயது இருக்கும் போது ஆஸ்துமா பிரச்சனை இருப்பது தெரிந்தது. அதனால் அப்போதிலிருந்து உணவு கட்டுப்பாடுடன் இருந்து வருகிறேன்.
நான் வளர்ந்த பிறகும் ஆஸ்துமா பிரச்சனை எனக்கு சரியாகவில்லை. குளிர் காலம் வரும்போது ஆஸ்துமா அதிகமானது. தூசு மற்றும் புகையை எதிர்கொள்கின்ற போது இந்த பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறேன். இதிலிருந்து விடுபடுவதற்கு இன்ஹேலர் பயன்படுத்தத் தொடங்கினேன். அதன்பிறகு நல்ல மாற்றங்கள் தெரிந்தன. நாட்டில் லட்சக் கணக்கானோருக்கு இந்த பிரச்சனை உள்ளது. அவர்கள் அனைவரும் பொது இடங்களில் இன்ஹேலரை பயன்படுத்த மிகவும் தயங்குகிறார்கள். அந்த தயக்கத்தை அனைவரும் நீக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.