வங்கதேசம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா 3 சாதனைகளை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ராகுல் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். இருவரும் தனது ஆதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தனர்.
தொடக்க முதலே அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் பல்வேறு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.ஒன்றல்ல இரண்டல்ல மூன்று சாதனையை நிகழ்த்திய ரோஹித் சர்மாவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
அதிக ரன் குவிப்பு :
நடப்பு உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் 516 ரன் குவித்த வார்னரை பின்னுக்கு தள்ளி 544 ரன்கள் குவித்து முதலிடத்தில் ரோஹித் உள்ளார்.
அதிக சதம் :
ரோஹித் சர்மா இந்த உலகக்கோப்பை தொடரில் 4 சத்தங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். அவர் சவுத் ஆப்ரிக்கா , பாகிஸ்தான் , இங்கிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்துள்ளார். உலக கோப்பை தொடரில் சங்காரா மட்டும் 4 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்த இன்னிங்ஸிஸ் அதிக சதம் :
உலக கோப்பை தொடரில் குறைவான இன்னிங்ஸிஸ் விளையாடி 5 சதம் அடித்ததில் ரோஹித் சர்மா முதலிடத்தில் உள்ளார். அதில் சச்சின் 44 இன்னிங்ஸிஸ் 6 சதமும் , சங்கரகாரா 35 இன்னிங்ஸிஸ் 5 சதமும் , ரிக்கி பாண்டிங் 42 இன்னிங்ஸிஸ் 5 சதமும் அடித்துள்ளனர். இந்த வரிசையில் ரோஹித் சர்மா 15 இன்னிங்ஸிஸ் 5 சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.