காதலர் தினம் உலகம் முழுவதும் உள்ள காதலர்களால் பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த காதலர் தினத்தன்று காதலர்கள் தங்களுக்கிடையில் ரோஜா பூக்கள், வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்துக் காதலர் தினத்தை கொண்டாடுவார்கள். அந்த வகையில் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 14ஆம் தேதி வரை வேலன்டைன் வீக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த வாரத்தின் ஆறாவது நாளன்று ஹக் டே கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் அர்த்தம் கட்டிப்பிடி தினம் ஆகும். இந்த நாளன்று நமக்கு மிகவும் பிடித்தவர்களுக்கு சந்தோஷத்தையும் அன்பையும் கட்டிப் பிடிப்பதும் மூலம் வெளிப்படுத்தும் நாள் ஆகும்.
தற்போதைய காலகட்டத்தில் நம்மை அதிகமாக நேசிப்பவர்களை நாம் சரியாக கவனிக்க மறந்துவிடுகிறோம். அவ்வாறு வரும்போது அவர்களுக்கு விரக்தி ஏற்படுகிறது. இதனால் நம்மை அதிகம் நேசிப்பவர்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும் விதமாக நாம் கட்டி அணைத்துக் கொள்வது தீர்வாகும். இப்படி கட்டிப்பிடிப்பது காதலை வெளிப்படுத்துவதற்காக மட்டுமல்ல அதிகமாக கோபத்தில் இருக்கும் உங்கள் துணையை சாந்தப்படுத்த சிறந்த வழி ஆகும். மேலும் எளிமையான முறையில் நம்முடைய உணர்வுகளை நாம் வெளிப்படுத்துவதற்கு சிறந்த வழியாகும்.
நீங்கள் ஒருவரை கட்டிப்பிடிக்கும் போது அவர்கள் உங்களுக்கு மிகவும் பிடித்தமானவர்கள் மற்றும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பதை அவர்களுக்கு எளிமையான முறையில் உணர்த்த முடியும். உங்கள் காதலன் அல்லது காதலி வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பும் போது அவர்களை கட்டிப்பிடிப்பதால் மன நிம்மதி ஏற்பட்டு வேலையில் உள்ள டென்ஷன்களும் குறையும். மேலும் இது ஒருவருடைய ஏமாற்றம், தனிமை, கோபம் போன்றவைகளை மனதில் இருந்து நீக்க உதவுகிறது. நமக்கு மிகவும் பிடித்தவர்கள் அல்லது நமது துணைகளை நாம் கட்டி பிடிப்பதனால் உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது.