நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது டாக்டர் ,அயலான் ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளது . இதில் டாக்டர் திரைப்படம் வருகிற மார்ச் மாதம் திரைக்கு வர உள்ளது . இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ என்ற படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
Happy to welcome #Shivaangi onboard for 😎 #DON @Siva_Kartikeyan @anirudhofficial @priyankaamohan @iam_SJSuryah @thondankani @sooriofficial #Munishkanth @RJVijayOfficial @kaaliactor @Bala_actor @KalaiArasu_ @SKProdOffl @Dir_Cibi @DONMovieOffl @DoneChannel1 pic.twitter.com/wOBttYblOS
— Lyca Productions (@LycaProductions) February 10, 2021
மேலும் இந்த படத்தில் டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் மற்றும் பிரபல நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது . இந்நிலையில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி ‘டான்’ படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .