Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிப் ஹாப் ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…!!!

ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடிக்கும் ‘சிவகுமாரின் சபதம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை2, கதகளி ,இமைக்காநொடிகள், கோமாளி ,ஆக்ஷன் ,கத்திச்சண்டை உட்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் . இவர் மீசைய முறுக்கு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . இந்தப் படத்தை அவரே இயக்கியிருந்தார் . இதைத்தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி நட்பேதுணை, நான் சிரித்தால் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார் .

இவர் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது . தற்போது நடிகர் ஹிப்ஹாப் ஆதி இரண்டாவதாக இயக்கி நடிக்கும் திரைப்படம் ‘சிவகுமாரின் சபதம்’ . இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது . இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .

 

Categories

Tech |